Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“இணையத்தில் முன்பதிவு” வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள யாகப்பா நகரில் இருக்கும் இ-சேவை மையத்தில் ரயில்  டிக்கெட்களை  முன்பதிவு செய்து  ரயில்வே துறையின் அனுமதியின்றி அதனை அதிக விலைக்கு விற்பனை செய்யவதாக ரயில்வே காவல் துறையினருக்கு ரகசிய தகவல்கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர்  ரயில் நிலையத்தில் தீவிர  தலைமையில்  சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ரயில்வே நிலையம் அருகில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் ரயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்தது   தெரியவந்ததுள்ளது. அந்த நபர்  தஞ்சையில் உள்ள  விலார் சாலை பகுதியில் வசிக்கும் பாலன் என்பதும்  இணையதளத்தில் ரயில் டிக்கெட்டுகளை  முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும்  தெரிய வந்துள்ளது. இதனையடுத்து  பாலனை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடமிருந்த டிக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.

Categories

Tech |