Categories
கிரிக்கெட் விளையாட்டு

SL VS AUS டி20 தொடர் : இலங்கையை வீழ்த்தியது ஆஸ்திரேலியா ….! தொடரை வென்று அசத்தல் ….!!!

இலங்கை அணிக்கெதிரான 3-வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டிநேற்று  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில்  களமிறங்கிய இலங்கை அணி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது.இறுதியாக இலங்கை அணி  20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கேன் ரிச்சர்ட்சன் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்.

இதன்பிறகு களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் ஆரோன் ஃபிஞ்ச் – கிளென் மேக்ஸ்வெல் இருவரின்  அதிரடி ஆட்டம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.இறுதியாக 16.5 ஓவரில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியது.

Categories

Tech |