ஈரோடு மாவட்டம் விளக்கேத்தி கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்ற பெண் நேபாளில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டியில், சிலம்பம் பிரிவில் கலந்துகொண்டு தங்கம் வென்றுள்ளார். இதையடுத்து தனது சொந்த கிராமத்திற்கு திரும்பிய கோமதிக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
ஹாக்கி, கால்பந்து, குத்துச்சண்டை என்று பல பிரிவுகளில் 70 பேர் கலந்து கொண்டதில், இந்தியாவுக்கு 42 தங்கம், 17 வெள்ளி, 11 வெண்கலம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கிராமத்துப் பெண்மணி சர்வதேச விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றது அப்பகுதி மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..