Categories
உலக செய்திகள்

ஐயோ பாவம்!!…. இம்ரான் கானுக்கு அடிக்கு மேல் அடி…. வீட்டை விட்டு வெளியேறிய மூன்றாவது மனைவி….!!

பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வர ஜனநாயக இயக்கம் என்ற அமைப்பின் கீழ் எதிர்கட்சிகள் முடிவெடுத்துள்ளார். 

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன. அந்தக் கூட்டத்தில் நவாஸ் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம், பாகிஸ்தான் மக்கள் கட்சியிலுள்ள பிரதிநிதிகள் கலந்து உள்ளனர். இம்ரான் கானுக்கு பதிலாக அடுத்த தலைமை பொறுப்பை ஏற்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றால் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி சர்தாரி பதவி ஏற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இம்ரான் கானுக்கு அடுத்த பிரச்சனையாக அவரது மூன்றாவது மனைவி புஷ்ரா மனேகா அவரைப் பிரிந்து தனியே வசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018ல் புஷ்ரா மனேகா என்பவரை இம்ரான் கான் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். புஷ்ராவுக்கு ஏற்கனவே திருமணமாகி ஐந்து குழந்தைகள் உள்ளனர். இம்ரான் கான் அவர்கள் யாரையும் தனது வீட்டிற்கு வரக்கூடாது என்று  திருமணத்திற்கு முன்னரே புஷ்ராவுக்கு நிபந்தனை விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதை மீறி புஷ்ராவின் மூத்த மகன் அடிக்கடி வீட்டிற்கு வருவார் எனவும் அதனால் அவருக்கு எரிச்சல் ஏற்படுவதாகவும் இதனால் மனைவியுடம் அடிக்கடி மோதல் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இம்ரான்கான் ஆசையாக வளர்த்த நாய்களை புஷ்ரா தன் மத சடங்குகளுக்கு இடையூறு செய்வதாக கூறி அவைகளை வெளியேற்றி உள்ளார்.

இதனாலும் கணவன்-மனைவிக்கிடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் புஷ்ரா திடீரென இம்ரான் கானின் ‘பானி கலா’ மாளிகையில் இருந்து வெளியேறி லாகூரில் உள்ள ஒரு தோழியின் வீட்டிற்கு சென்று உள்ளதாக இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Categories

Tech |