Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நாளை முதல் (பிப்ரவரி 17) 19ஆம் தேதி வரையும், வாக்கு எண்ணும் நாளான 22ம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணும் நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளிலும், அதன் அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |