இணையதளத்தில் இளைஞர் ஒருவர் வீட்டில் இருந்து 6 பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அச்சத்தில் இருக்கிறது. இதனால் அனைவரது பணிக்கும் சற்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவிட்டுள்ளன. இந்த செயல்பாட்டினால்இது நன்றாக இருப்பதாக ஒரு தரப்பினரும், அலுவலகத்தில் வேலை செய்வது போன்ற வசதி இல்லை என இன்னொரு தரப்பினரும் கூறிவருகின்றனர். மேலும் பெரும்பாலான நிறுவனங்களில் ஆன்லைனிலேயே வேலையும் கல்வியும் ஓரளவுக்கு சாத்தியமாகி உள்ள நிலையில் “வொர்க் பிரம் ஹோம் மாடல்” தொடருமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சில நிறுவனங்களில் மட்டும் வீட்டிலிருந்தே பணி செய்யும் நிலை உள்ளது.
இந்நிலையில் வீட்டில் இருந்து பணி செய்யும் ஒருவர் ஒரே சமயத்தில் 6 இடங்களில் வேலை செய்வது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ரெட்டிட்டர் இணையதளத்தில் இளைஞர் ஒருவர் வீட்டில் இருந்து பணி செய்யும் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் “நான் ஐரோப்பாவை சேர்ந்த ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். மேலும் குறைந்த காலகட்டத்தில் வீட்டில் இருந்து பணி செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த காலகட்டம் என்னை இரண்டாவது தொழில் செய்யும்படி உந்தி தள்ளியது. இந்த முயற்சியின் மூலம் நான் தற்போது 6 நிறுவனத்தின் வேலைகளை ஒரே நேரத்தில் செய்து வருகிறேன். இந்த பணிகள் அனைத்தும் முழுநேர பணிகளாகும். இது வீட்டிலிருந்து வேலை செய்வதே சாத்தியமானது. இதனைத் தொடர்ந்து நான் இந்த வருடம் ரூ.5.27 கோடியை சம்பாதித்து விடுவேன்.
மேலும் 40 வயதிற்குள் கோடீஸ்வரனாக மாறி ஓய்வுபெற திட்டமிட்டுள்ளேன். இந்த கனவை நினைவாக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். மேலும் எனது நிறுவனத்தினர் என்னை ஒரு டெவலப்பர் என்ற அளவில் மட்டுமே வைத்துள்ளனர். இந்த வேலையை நான் திறமையாக செய்து வருகிறேன். மேலும் நான் மற்றவர்களுடன் அதிகமாக நேரம் செலவிடுவது கிடையாது. இதனால் நிறுவனமும் என்னை கண்டு கொள்ளாது” என குறிப்பிட்டுள்ளார். இவரரை பலர் பாராட்டி பகிர்ந்து வருகின்றனர். மேலும் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த 6 மாதங்களில் 32 லட்சம் வேலை தேடுபவர்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமான வேலைகளை தேடியுள்ளனர்.