கோவில் குடமுழுக்கு விழாவில் பெண்களிடமிருந்து தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரிமளம் பகுதியில் உள்ள அய்யனார் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக சீகம்பட்டி கிராமத்தில் வசிக்கும் பாலமுருகனின் மனைவி நந்தினி மற்றும் அவரது மகன் யோஜித் ஆகியோர் சென்றுள்ளனர். இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி கொண்டு யோஜித் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.
மேலும் வையாபுரிபட்டி கிராமத்தில் வசிக்கும் பாலசண்முகம் என்பவரின் மனைவி செல்லம்மாள் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையையும் மர்ம நபர்கள் திருடியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.