ருத்ரகோடீஸ்வரர் கோவிலில் 5-வது நாள் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ். வி மங்கலத்தில் பிரசித்தி பெற்ற ருத்ரகோடீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 7ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
இந்நிலையில் 5 -வது நாளான நேற்று விநாயகர், முருகன், பிரியாவிடை அம்மன், சண்டிகேஸ்வரர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 4 சப்பரங்களில் உலா வந்தனர். இதனையடுத்து நடைபெற்ற தீபாரணையில் பலவேறு பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்துள்ளனர்.