சோமசுந்தரேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் விழா நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லறையில் பிரசித்தி பெற்ற சோமசுந்தரேஸ்வரர்- சவுந்தரநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு நேற்று மாசி மாதத்தை முன்னிட்டு திருவிழா நடைபெற்றது.
இந்நிலையில் சோமசுந்தரேஸ்வரர் சௌந்தர்ய நாயகி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து திருக்கல்யாணம் ஊஞ்சல் சேவை, பவனி வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளிலிருந்து கலந்து கொண்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்களுக்கு குங்குமம் மற்றும் மஞ்சள் கயிறுகள் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது.