ஈராக் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலை வெளிப்படுத்தும் வகையில் டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்
ஈராக் நாட்டின் பாக்தாத் விமான நிலைய தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை ராணுவ தளபதி காசிம் சோலிமானி பலியாகியுள்ள சம்பவம் உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் துணை தலைவர் அபு மஹாதியும் இறந்தார்.
ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் அபு மஹாதி ஈரான் ஆதரவுடன் இயங்கியதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. அதே போல அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின் பேரிலே தாக்குதல் ஈராக்கில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
ஈராக் தாக்குதல் நடத்திய பின் அமெரிக்க அதிபர் தனது ட்வீட்_டர் பக்கத்தில் அமெரிக்க கொடியை பதிவிட்டுள்ளார். அதே போல ஈராக்கில் அமெரிக்கா தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோரை தாக்க காசிம் சோனாலி திட்டமிட்டதால் காசிம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
— Donald J. Trump (@realDonaldTrump) January 3, 2020