Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முகநூல் காதலியால்…. நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதல்…. நாமக்கலில் பரபரப்பு….!!

நண்பரின் முகநூல் காதலியுடன் பேசியதால் வாலிபரை தாக்கிய 3 பேரை கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள வெள்ளாளப்பட்டியில் மணிகண்டன்(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்போன் கோபுரம் அமைக்கும் தொழிலாளியான பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பரான சுபாஷ் என்பவர் முகநூல் மூலம் சென்னையை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த வந்த நிலையில் அதே பெண்ணுடன் சுபாஷுக்கு தெரியாமல் மணிகண்டனும் பேசி வந்தார். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண் சுபாஷுடன் பேசுவதை திடீரென நிறுத்தியுள்ளார்.

இதுகுறித்து விசாரித்தபோது சுபாஷின் காதலியுடன் மணிகண்டனும் நெருங்கி பழகியது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சுபாஷ் தன் மற்ற நண்பர்களான வெங்கடேசன்(28), தினேஷ்(21) மற்றும் 18 வயது வாலிபர் ஆகியோருடன் சென்று மணிகண்டனை கண்டித்துள்ளார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சுபாஷ் அருகில் இருந்த மண்வெட்டியை எடுத்து மணிகண்டனினை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்நிலையில் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த மணிகண்டனை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் பேளுக்குறிச்சி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து வெங்கடேசன், தினேஷ் மற்றும் 18 வயது வாலிபரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள சுபாஷை  வலைவீசி தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |