புஷ்பா படத்தை தொடர்ந்து அல்லு அர்ஜுனுடன் நடிப்பதற்கு நடிகைகள் போட்டி போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அல்லு அர்ஜுன் ஒரு தெலுங்கு மொழி திரைப்பட நடிகர். இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் தமிழில் அறிமுகமானார். அவரது புஷ்பா படம் தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படம் இந்தியில் மட்டும் 106 கோடி ரூபாய் வசூலித்து இருக்கிறது.
தெலுங்கு படத்திற்கு இவ்வளவு வரவேற்பு கிடைத்ததை பார்த்த பிறகு தற்போது அஜித்தின் வலிமை படத்தை இந்தியில் 1,000 தியேட்டர்களில் வெளியிட இருப்பதாக போனி கபூர் கூறியிருக்கிறார். புஷ்பா படம் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளது. அந்த படத்தில் வரும் பாடல்களுக்கு நடனமாடி எக்கச்சக்க சினிமா நட்சத்திரங்களும் வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் தீபிகா படுகோன் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை தெரிவித்துள்ளார். மேலும் சமீபகாலத்தில் ஆலியா பட் போட்டியில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக விருப்பம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.