பிரேசிலில் பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு 18 பேர் பலியாகியுள்ளதா க தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அந்நகரின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, ஆறுகளில் வெள்ளப்பெருக்கு உருவானது. எனவே, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் பல வீடுகள் சேதமடைந்து இருக்கிறது.
மேலும், நகரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் மாட்டிக்கொண்ட 18 நபர்கள் பலியாகியுள்ளனர். மேலும் பலர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். பலத்த மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. எனவே, மேலும் பாதிப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.