சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில் 19 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை அடுத்த தாயார் சாகிப் தெருவை சேர்ந்தவர் யாசர். 2 நாட்களுக்கு முன்பு இவர் தனது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது இரு சக்கர வாகனத்தை காணவில்லை மர்மநபர்கள் யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து யாசர் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்த பொழுது அங்கே சிசிடிவி காட்சிகள் பொருத்தப்பட்டிருப்பது தெரிய வர, அதனை ஆராய்ந்த பொழுது இரண்டு பெண்கள் கள்ளச்சாவி போட்டு வண்டியை திறந்து திருடிச் சென்றது அதில் பதிவாகி இருந்தது.
அதன் அடிப்படையில் ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்ற 19 வயது பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். அவரது நண்பரான மோனிஷா தப்பி ஓட அவரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். திருடப்பட்ட மோட்டார்சைக்கிள் பத்திரமாக மீட்கப்பட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.