மயிலாடுதுறையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள பாஜக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தேர்தல் பரப்புரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “அதிமுக ஆட்சிக்கு வந்து 8 மாத காலங்களில் மக்களிடம் அதிருப்தியை பெற்று விட்டது. பொங்கல் பரிசு ஊழல், எங்கு சென்றாலும் கமிஷன், கரப்ஷன் என அதிமுகவின் பெயர் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஆகியுள்ளது. 517 தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தார். முதல்வர் ஸ்டாலின் ஆனால் தற்போது 7 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. குடும்பத் தலைவிக்கு 1000 ரூபாய் பணம் எங்கே.? கூட்டுறவு வங்கியில் நகை கடன் தள்ளுபடி எங்கே.? கேஸ் சிலிண்டருக்கான மானியம் எங்கே.? என மக்கள் கேள்வி கேட்பார்கள் என பயந்து போய் காணொளி வாயிலாக தனது பிரச்சாரத்தையும் பரப்புரையும் செய்து வருகிறார் ஸ்டாலின்.
நீட் தேர்வில் மூலம் ஏழை மக்களின் மருத்துவ கனவு நனவாகியுள்ளது. திமுக தனியார் மருத்துவக் கல்லூரிகளை ஊக்குவித்து வந்தது. ஆனால் பிரதமர் மோடி தற்போது தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை துவங்கியுள்ளார். இதன் மூலம் பல லட்சக்கணக்கான மருத்துவர்கள் உருவாக்கி உள்ளனர். எனவே தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் அது உங்கள் கையில் தான் உள்ளது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!” என அவர் கூறினார்.