Categories
அரசியல்

முதல்வரின் அடுத்த அரசியல் திட்டம் இதுதானாம்….!! பொது இடத்தில் உண்மையை உடைத்த ஓபிஎஸ்…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நெல்லை தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் திமுக அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று நெல்லை டவுன் பகுதியில் தேர்தல் பரப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது, “அதிமுக ஆட்சிக்கு வந்து 10 மாத காலங்களில் 8000 கோடி வரை ஊழல் செய்து விட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. செய்திருக்க வாய்ப்புள்ளது ஏனெனில் எங்கு சென்றாலும் கமிஷன், கரப்ஷன் என்பதுதான் திமுகவின் சாதனை. அவ்வாறு இருக்கையில் ஊழல் மட்டும் எவ்வாறு நடைபெறாமல் இருக்கும். 517 க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்தார் முதல்வர் ஸ்டாலின். வாய் ஜாலம் செய்து ஆட்சியை பிடித்த முதல்வர் என்றால் அது நம்ம ஸ்டாலின் தான். தற்போது ஏழு வாக்குறுதிகள் கூட நிறைவேற்றப்படவில்லை.

கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் என்ன ஆனது ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியும் வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. வெற்றி பெற்ற உடனே முதல் கையெழுத்து நீட் தேர்வுக்கு எதிரானதாக தான் இருக்கும் எனக் கூறினார். முதல்வர் மட்டும் கையெழுத்து போட்டால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியுமா.? அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் தேவை. அதனை பெற முதல்வர் இடத்தில் திறன் இல்லை. எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் ஒரு அவல ஆட்சிதான் நடைபெறுகிறது. மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற உள்ள எதிர்க்கட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்க இருக்கிறாராம். முதலில் பத்து மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தமிழக மக்களிடம் சொன்னதையெல்லாம் செய்து முடித்துவிட்டு தேசிய அரசியல் பக்கம் போகட்டும்.” எனக் கூறினார்.

Categories

Tech |