Categories
சினிமா தமிழ் சினிமா

தோளில் கைபோட்டு இருக்கும் ரஜினி…. புகைப்படத்தை வெளியிட்டுள்ள இசைஞானி…. ரசிகர்கள் மகிழ்ச்சி….!!!

ரஜினியுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ ஒன்றை இளையராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இளையராஜா இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்கள் ஒருவர். இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்திற்கு இசை அமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதுவரை 1200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா 7,000 பாடல்களுக்கு மேல் கம்போஸ் செய்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களுடன் நல்ல நட்பை பாராட்டி வருகிறார்.

அதிலும் குறிப்பாக ரஜினி மற்றும் கமல் உடன் நெருங்கிய நட்புறவை கொண்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் போட்டோக்களையும், வீடியோக்களையும் சேர் செய்துவரும் இளையராஜா. இன்று இளமை காலத்தில் ரஜினி இளையராஜாவின் தோளில் கையை போட்டு எடுத்துள்ள  போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவுக்கு என்றும் என்றென்றும் எனக் குறிப்பிட்டு ரஜினிகாந்தின் டிவிட்டர் ஹண்ட்ல்லை டேக்  செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மிக மகிழ்ச்சியாக உள்ளனர்.

Categories

Tech |