சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிளில் புகையிலை கடத்தி வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள திசையன்விளையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்களை மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிகையிலையை கடத்தி வந்தது சுடலைமணி, முத்துவேல், செல்வராஜ் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த புகையிலை பாக்கெட்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.