கௌதமாலா என்ற மத்திய அமெரிக்க நாட்டில் மிகப் பெரிய நிலநடுக்கம் உருவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவுதமாலா நாட்டின் தலைநகரான கவுதமாலா நகரில் இன்று மிகப்பெரிய நிலநடுக்கம் உருவானது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் அந்த பகுதியில் இருக்கும் கட்டிடங்கள் குலுங்கியது. எனவே, மக்கள் பதறியடித்துக் கொண்டு வெளியில் ஓடி சென்றுள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டதா என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.