பெண்களைக் கேலி செய்ததை தட்டிக்கேட்ட வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பொன்னகரம் பகுதியில் மகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெர்கின் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இவரது வீட்டின் அருகில் உள்ள பெண்களை முனியசாமி கோவில் அருகில் வசிக்கும் ஜேம்ஸ் சந்தோஷம் மற்றும் அவருடைய 3 நண்பர்கள் சேர்ந்து கேலி செய்துள்ளனர். இதனை பெர்கின் தட்டி கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த ஜேம்ஸ் சந்தோசம் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பெர்கினை அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பெர்கின் தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜேம்ஸ் சந்தோசத்தை கைது செய்துள்ளனர்.