கொலம்பியாவில் மின்கம்பத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஸ்லாத் கரடியை மின்சார பணியாளர் காப்பாற்றியிருக்கிறார்.
கொலம்பியா நாட்டில் இருக்கும் ஆன்டியோக்குவியா என்ற மாகாணத்தின் டராசா பகுதியில் ஒரு கரடி மின் கம்பத்தில் தொங்கிக் கொண்டிருந்தது. இது பற்றி மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அந்த இடத்திற்கு சென்ற மின்சார பணியாளர் ஒருவர், மின்கம்பத்தில் ஏறி கரடியை காப்பாற்ற முயன்றார்.
ஆனால் அவரை பார்த்தவுடன் கரடி பயந்தது. எனினும் நீண்ட நேரமாக போராடி, துடைப்பத்தை பயன்படுத்தி கரடியை பாதுகாப்பாக மீட்டுவிட்டார். தற்போது, அந்த கரடி காட்டுப்பகுதியில் விடப்பட்டிருக்கிறது.