மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவாஜி நகரில் கூலித் தொழிலாளியான கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமையன்பட்டி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென கணேசனின் மீது பலமாக மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.