சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை லாரியில் கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் ராஜேஷ் என்பவர் லாரியில் 10 டன் ரேஷன் அரிசிகளை கேரளாவிற்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் ராஜேஷை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி மற்றும் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.