குத்துச்சண்டை போடியில் இண்டர்நேஷனல் சாம்பியன் பட்டம் வென்ற மாணவனுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள எஸ் .எம். எஸ். எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து குத்துச்சண்டையில் இன்டர்நேஷனல் சம்பியன்ஷிப் பட்டம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், குத்துச் சண்டை பயிற்சியாளர் ஜாகிர் உசேன், தலைமை ஆசிரியர் முருகேசன், உடற்கல்வி இயக்குனர் சஞ்சய் காந்தி, ஆசிரியர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் இன்டர்நேஷனல் சாம்பியன் பட்டம் பெற்ற ஆத்திக்கு முதன்மை கல்வி அலுவலர் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி பாராட்டியுள்ளார்.