வாக்கு எண்ணப்படும் மையத்தை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 19-ஆம் தேதி 4 நகராட்சிகளிலும் மற்றும் 3 பேரூராட்சிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் வைத்து தேர்தலுக்கான வாக்குகளை எண்ணப்பட இருக்கின்றது.
இந்த வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று வாக்கு பெட்டிகள் வைக்கப்படும் இடங்கள் மற்றும் வாக்கு எண்ணும் இடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் பாதுகாப்பு வசதிகள் குறித்தும் அவர் ஆய்வு செய்துள்ளார்.