நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தி உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு மிகவும் குறுகிய காலம் இருப்பதால் வேட்பாளர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதன்பின் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு துணை காவல்துறை சூப்பிரண்டு சாந்தலிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதனை அடுத்து டவுன் கோட்டை தெருவில் தொடங்கி அண்ணா நகர் உள்பட 3 நகரில் இருக்கும் பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்து கொண்டு அணிவகுப்பில் சென்றுள்ளனர்.