கடையில் பற்றி எரிந்த தீயை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகில் புகழேந்தி என்பவருக்கு சொந்தமான அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை அமைந்துள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் வியாபாரம் முடிந்த பிறகு புகழேந்தி கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார். இதனையடுத்து கடையில் இருந்து கரும்புகை வெளியேறுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புதுறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு கடையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீவிபத்தில் கடையில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.