5-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அன்னமங்கலம் கிராமத்தில் ஜெயசங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வயலுக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த ஜெய்சங்கர் தனது மகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து உடலை தூக்கில் தொங்கவிட்டனரா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.