சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் பகுதியில் நேற்று உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையோரத்தில் உள்ள முட்செடிகளுக்கு இடையில் தார்ப்பாயை வைத்து ஏதோ மூடப்பட்டு இருந்துள்ளது. இதனைகண்ட காவல் ஆய்வாளர்கள் அந்த இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிறிய மூட்டைகளில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
அந்த மூட்டைகளில் மொத்தம் 1600 கிலோ ரேஷன் அரிசி இருந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் கேரளாவிற்கு கடத்துவதற்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தித்திருந்த மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.