Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘இந்திய டி20 அணி’…. ராகுல் வேண்டாம்…. ரோஹித்கூட இவர ஓபனராக இறக்குங்க…. ஹர்பஜன் சிங் கருத்து….!!!

இந்தியா டி20 தொடருக்கான அணியில் இஷான் கிஷனை ஓபனராக களம் இறக்க வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு வந்த மேற்கிந்திய தீவுகள்அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கு பெற்று விளையாடியது. இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்தி 3-0  என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைதொடர்ந்து டி20 தொடர் இன்று முதல் ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று போட்டிகளாக கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. மேலும் கே.எல்.ராகுல் டி20 தொடரின் அணிக்கு துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காயம் ஏற்பட்டதால் விலகியுள்ளார்.

இதனால் இவருக்கு மாற்றாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து இந்திய அணி முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் செய்தியாளருக்கு கொடுத்த பேட்டியில் கூறியதாவது, இஷான் கிஷானை இனிவரும் டி20 போட்டிகளில் ஓபனராக களமிறக்க வேண்டும் என்றும், இவரை ரோஹித்துடன் ஓபனராக டி20 கிரிக்கெட்டில் களமிறக்குவது தான் சரியாக இருக்கும் என நினைப்பதாக கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், ஒருநாள் அணியில் ராகுலால் 5-வது இடத்தில் களம் இறங்க முடியும் என்றால், டி20 கிரிக்கெட்டில் மட்டும் ஏன் களம் இறங்க முடியாது? என கேள்வி எழுப்பி உள்ளார். ஒருநாள் அணியின் பின்வரிசையில் களமிறங்கி அதிரடியாக விளையாடுவது போன்று டி20 கிரிக்கெட் விளையாட்டிலும் செயல்படுத்தலாம் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து டி20 பவர் பிளேவில் இஷான் கிஷான் போன்றவர்கள்தான் பயமில்லாமல் விளையாடி ரன்களை குவிப்பார்கள். எனவே இவர்களுக்கு தொடர்ந்து ஓபனராக  வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார். இந்நிலையில் ரோஹித்  சர்மாவுடன்  இஷான் கிஷான் இணைந்து ஓபனராக  களமிறங்குவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |