Categories
தேசிய செய்திகள்

“ஏழுமலையான் பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!”தேவஸ்தானத்தின் சூப்பர் முடிவு….!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவல் காரணமாக குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் வைரஸ் தொற்று தற்போது குறைந்துள்ள நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது 300 ரூபாய் தரிசன டிக்கெட்டில் நாள் ஒன்றுக்கு 10,000 பேரும் இலவச தரிசன டிக்கெட் 10,000 பேரும் கல்யாண உற்சவம், ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 10,000 பேரும் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று நாள் ஒன்றுக்கு 15000 தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட உள்ளன.

அதோடு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வகையில் திருப்பதியிலிருந்து ஒரு நாளைக்கு 68 முறை பஸ்கள் சென்னைக்கு இயக்கப்படுகின்றன. 15 நிமிடத்திற்கு ஒரு பஸ் வீதம் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் வேலூரில் இருந்து 24 மணி நேரமும் திருப்பதிக்கு பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |