Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : சாய்ந்தது அதிமுக… மாவட்ட கவுன்சிலர் போட்டியில் திமுக முன்னிலை!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவியில் திமுக முன்னிலை வகித்து வருகின்றது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் தொடங்கி இரவு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது.

வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான போட்டியில் திமுக , அதிமுக என மாறி மாறி சரிக்கு சமமான இடங்களை பெற்று வந்த நிலையில் இன்று காலை முதலே திமுக முன்னிலையில் வகித்து  வருகின்றது. தற்போது வரை திமுக முன்னிலை வகிப்பதால் அதிக இடங்களை கைப்பற்றுவது  உறுதியாகியுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை…

முன்னிலை நிலவரம்..!

மாவட்ட கவுன்சிலர் –  507/515

திமுக+ – 268

அதிமுக+ – 239

பிற கட்சிகள் – 00

Categories

Tech |