Categories
மாநில செய்திகள்

மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு மாநகர் போக்குவரத்து கழகத்தை சேர்ந்த பணியாளர்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் பிப்ரவரி 19-ஆம் தேதி பொது விடுமுறை தினமாக போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் அறிவித்துள்ளார்.

மேலும் போக்குவரத்து பொதுசேவை எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் செயல்பட வேண்டும். அத்தியாவசிய பணியை முன்னிட்டு பிப்ரவரி 19 ஆம் தேதியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நடைமுறையில் உள்ளவாறு கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |