Categories
மாநில செய்திகள்

ஜெயிலில் இருக்கும் கைதிகளை பார்க்கலாம்…. டி.ஜி.பி. அதிரடி அறிவிப்பு….!!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை சந்திப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் கைதிகளை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது, கைதிகளை ஒரே நேரத்தில் 2 பேர் மட்டுமே சந்திக்கலாம். இதனிடையில் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சந்திக்க அனுமதி இல்லை. ஆனால் பிற நாட்களில் காலை 9:00 மணியில் இருந்து மாலை 4:00 மணி வரை சந்திக்கலாம்.

அவ்வாறு கைதிகளை சந்திக்க வரும் பார்வையாளர்கள், உறவினர்கள், வழக்கறிஞர்கள், இரண்டு  டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ், 72 மணி நேரத்திற்கு முன் பெற்ற கொரோனா தொற்றின்மை சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றின் நகலை, கைதியை சந்திக்க அனுமதி கோரும் மனுவுடன் இணைக்க வேண்டும். மேலும் பார்வையாளர்கள் மற்றும் கைதிகள் முன்பே உள்ள பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கைதிகளை சந்திக்கும் நடைமுறை ( பிப்…16) நேற்றில் இருந்து அமல்படுத்தப்பட்டு உள்ளதாக, சிறைத்துறை டி.ஜி.பி., சுனில்குமார் சிங் அறிவித்துள்ளார்.

Categories

Tech |