Categories
மாநில செய்திகள்

“ஜாலியோ ஜாலி”…. தமிழகத்தில் இந்த பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை…. வெளியான அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு நாளை (பிப்..18) பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது.

அவ்வாறு பயிற்சி முடிந்ததும் ஆசிரியர்கள் நேரடியாக ஓட்டுச்சாவடி பணிக்கு செல்ல உத்தரவிடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக எந்தெந்த பள்ளிகளில் இருந்து 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்தல் பணிக்காக செல்கிறார்களோ அப்பள்ளிகளுக்கு மட்டும் நாளை (பிப்..18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை மறுநாள் (பிப்..19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |