தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நாளையும் (பிப்…18), நாளை மறுநாளும்(பிப்…19), வாக்கு எண்ணிக்கை நாளான (பிப்ரவரி 22)ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையில் பிப்ரவரி 21ஆம் தேதி மட்டும் பள்ளி வேலை நாள் என்பதால்(பிப்ரவரி 20 ஞாயிறு) அன்றும் சேர்த்து 5 நாட்கள் விடுமுறை அறிவிக்க மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த கோரிக்கையை அரசு ஏற்றால் 18ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.