காதலர் தினத்தன்று தன் முன்னாள் மனைவி கிம் கர்தாஷியாவுக்கு லாரி முழுவதும் ரோஜா பூக்களை அனுப்பி வைத்தார் கன்யே வெஸ்ட்.
அமெரிக்க நடிகையும் தொழிலதிபருமான கிம் கர்தாஷியா, ராப்பரான கன்யே வெஸ்ட் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் கிம்மும், கன்யே வெஸ்ட்டும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இந்நிலையில் கிம் கன்யேவிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார். ஆனால் கன்யேவோ மீண்டும் கிம்முடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறார்.
இந்நிலையில் கன்யே காதலர் தினத்தன்று ஒரு லாரி முழுவதும் ரோஜா பூக்களை கிம்மிக்கு அனுப்பி வைத்திருக்கிறார் என்று பரபரப்பாக பேசப்படுகிறது. “My Vision is Krystal Klear” என்கிற வாசகம் எழுதப்பட்டிருந்த அந்த லாரியில் தான் ரோஜா பூக்கள் சென்றிருக்கிறது. அதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் கன்யே. கிம் ஏற்கனவே கன்யேவிடம் எனக்கு உங்களுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று தெளிவாக கூறியிருந்தார். இருப்பினும் கன்யே தன் முயற்சியை கைவிடுவதாக இல்லை. கிம் வசிக்கும் பங்களாவுக்கு எதிரே வீடு வாங்க முயற்சி செய்து வருகிறார் கன்யே வெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.