சென்னையில் நேற்று (பிப்ரவரி 16) ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது. அதாவது நேற்று காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 248 குறைந்து ரூபாய் 37,320க்கும், கிராமுக்கு ரூபாய் 31 குறைந்து ரூபாய் 4,665க்கும் விற்பனையானது. அதேபோன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூபாய் 40 காசுகள் குறைந்து ரூபாய் 67.80 க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று (பிப்…17) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 376 உயர்ந்து, ரூபாய் 37,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது கிராமுக்கு ரூபாய் 47 உயர்ந்து ரூபாய் 4,710க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூபாய் 68க்கு விற்பனை செய்யப்படுகிறது..