Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

சண்டை போட்ட மாணவர்கள்…. பூக்கார பெண்ணுக்கு நடந்த கொடூரம்…. பெரும் பரபரப்பு….!!!!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பொன்னேரி பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கு இடையில் தகராறு ஏற்ப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஒரு தரப்பைச் சேர்ந்த மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் சில பேரை அழைத்து வந்து மற்றொரு பள்ளி மாணவர்களை தாக்கியதாக தெரிகிறது. அப்போது இருதரப்பினரும் கற்களை வீசி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இந்த நிலையில் அப்பகுதயில் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்..

Categories

Tech |