Categories
உலக செய்திகள்

இந்தியா மீது பொருளாதார தடை…? அமெரிக்காவின் பதில் என்ன…? வெளியான தகவல்…!!!

அமெரிக்கா, ரஷ்ய நாட்டிடமிருந்து எஸ் 400 வகை ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பை வாங்கிய இந்தியா மீது பொருளாதார தடையை விதிக்குமா? என்பது தொடர்பில் தகவல் தெரிவித்திருக்கிறது.

இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து எஸ்-400 வகை அதிநவீன வான்வெளி பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கியுள்ளது. இந்த ஏவுகணைகள் சுமார் 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா சிறிய விமானங்கள் போன்றவற்றை தாக்கி அழிக்கக்கூடிய திறனுடையது.

இந்தியா, இந்த ஏவுகணைகளை வாங்குவதற்காக சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது. அதன்படி, ரஷ்யா ஏவுகணை தடுப்பு பாதுகாப்பு அமைப்பினுடைய முதல் தொகுப்பை இந்தியாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. இதனிடையே அமெரிக்கா, ரஷ்ய நாட்டிடமிருந்து ஏவுகணை தடுப்பு அமைப்பை இந்தியா வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரின்ஸ் இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பது தொடர்பில் தெரிவித்ததாவது, குவாட் மாநாட்டில் இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு இடையில் உள்ள  பாதுகாப்பு விவகாரம் குறித்து இரண்டு தரப்பு ஆலோசனைகள் நடந்தது. அதனை தவிர்த்து பிற விவகாரங்கள் குறித்து தற்போது விளக்கமளிக்க விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |