Categories
தேசிய செய்திகள்

திருமண விழாவில் சோகம்….!! “கிணற்றுக்குள் விழுந்து 13 பெண்கள் பலி…!!”

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா என்ற கிராமத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 28 க்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் வீட்டின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வலையால் மூடப்பட்டு அதன் மேல் கான்கிரீட் கொண்டு பூட்டப்பட்டிருந்த கிணறு ஒன்றின் மீது நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பாரம் தாங்காமல் அந்த கான்கிரீட் மேலடுக்கு இடிந்து விழுந்தது. இதில் அதன்மேல் நின்று கொண்டிருந்த பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட சுமார் 28 பேர் கிணற்றுக்குள் விழுந்தனர்.

இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 15க்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகளை மீட்டெடுத்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் கிணற்றுக்குள் விழுந்த பெண்கள் சிறுமிகள் உட்பட 13 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “உத்தரபிரதேச மாநிலம் குஷி நகரில் ஏற்பட்ட விபத்து நெஞ்சை உலுக்குகிறது . இந்த விபத்தில் உயிரிழந்த பெண்களுக்கு தலா 2 லட்சம் நிதி நிவாரண நிதியாக வழங்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியாக வழங்கப்படும்.” என அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |