Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமாக செயல்…. சோதனையில் தெரிந்த உண்மை …. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக  கொண்டு வந்த 288 மது  பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமாரலிங்கபுரம் சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் கிருஷ்ணன் என்பவர் உரிய ஆவணம் இன்றி 288 மது பாட்டில்களை காரில் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மது பாட்டில்களை கொண்டு  வந்தது  கிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது.அதன்பின் காவல்துறையினர் கைது  செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |