நடிகர் சூரி நேரடியாக சிவகார்த்திகேயன் வீட்டிற்கு சென்று பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளராக இருந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் அனைத்து துறைகளிலும் கற்றுத் தேர்ந்து விரைவிலேயே வெள்ளித்திரையில் நாயகன் ஆனார். இவரின் நடிப்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 37-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகின்றனர். மேலும் அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதுபோன்று நடிகர் சூரி அவர்களும் சிவகார்த்திகேயனை நேரடியாக சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். நடிகர் சூரி அவரது வீட்டிற்கு நேரடியாக கேக் உடன் சென்று கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
அப்போது எடுத்த புகைப்படங்களை நடிகர் சூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் “என் அன்பு தம்பி செல்ல தம்பிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” என ஹார்டின் குறியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் சூரி கூட்டணி வெற்றி கூட்டணியாக வலம் வருகிறது. இருவரும் இணைந்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடிபில்லா கில்லாடி ரங்கா, சீமராஜா, மனம் கொத்தி பறவை ஆகிய படங்களில் அவர்கள் இருவருக்கும் கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்தது. இவர்கள் இருவரும் சினிமாவையும் தாண்டி நல்ல நட்பை கொண்டுள்ளனர்.