Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே ஒரு வாக்கு….. தம்பிக்கு வந்த சோதனை ….. அண்ணன் வேதனை ….!!

ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவு நாம் தமிழர் கட்சியை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி, விழுப்புரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக அறிவிக்கப்பட்டு தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து பதிவான வாக்குகள் 315 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு நேற்று காலை 8 மணி முதல் விடிய விடிய எண்ணப்பட்டு வருகின்றது.

வாக்கு எண்ணப்படும் மையங்கள் முழுவதும் 30354 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியில் திமுக , அதிமுக என மாறி மாறி சரிக்கு சமமான இடங்களை பெற்ற நிலையில்  தொடர்ந்து 29 மணி நேரம் கடந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது.முடிவுகள் வந்துகொண்டு இருக்கின்றது.

வெளியான முடிவுகளின் படி திமுக , அதிமுக சரிக்கு சமமான பலத்துடன்  மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர்  பதவிகளை பெற்று வருகின்றது. அதே வேளையில் தமிழகத்தில் திமுக அதிமுகவிற்கு மாற்றாக சொல்லிக்கொள்ளும் நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அந்த கட்சி சார்பில் ஒரே ஒரு மாவட்ட கவுன்சிலர் வெற்றி பெற்றுள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தின் 11வது வார்டு கவுன்சிலர் வேட்பாளர் நெ.சுனில் மட்டும் அக்கட்சிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்.மற்றபடி அனைத்து இடங்களிலும் 10-க்கு குறைவான வாக்குகள் கூட பெற்றுள்ளதாக சொல்லப்படுகின்றது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஊராட்சியில் சீமான் கட்சிக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்துள்ளது. அக்கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில் வேட்பாளரின் குடும்பத்தினர் கூட ஓட்டு போடவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது வேதனையடைய வைத்துள்ளது.

Categories

Tech |