சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் (805 புள்ளி) முதலிடமும் , முகமது ரிஸ்வான் (798 புள்ளி) 2-வது இடத்திலும் , தென்ஆப்பிரிக்கா அணியின் மார்க்ராம் (796 புள்ளி) 3-வது இடத்திலும், இந்திய அணியில் கே.ல்.ராகுல் (729 புள்ளி) , 4-வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் இந்திய அணியில் விராட் கோலி 10-வது இடத்திலும் , ரோகித் சர்மா 11-வது இடத்திலும் உள்ளனர்.
அதேபோல் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இலங்கை அணியின் ஹசரங்கா 760 புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதனால் தென்ஆப்பிரிக்கா அணியின் தப்ரைஸ் ஷம்சி 784 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார். இதைதொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான முதல் 3 டி20 போட்டிகளில் 8 விக்கெட் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் 783 புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறினார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 21-வது இடத்தில் உள்ளார்.