Categories
உலக செய்திகள்

ஊக்கமளிப்பது சிறந்த விஷயங்களில் ஒன்று…. சாலையோர குழந்தைகளுக்கு…. கல்வி தந்த பட்டதாரி….!!!

தலீபான் ஆட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சாலையோரமாக வியாபாரம் செய்யும் குழந்தைகளுக்கு பட்டதாரி பெண் ஒருவர் இலவச கல்வி அளித்து வருகிறார்.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் கட்டுப்பாடுகளுக்கு மாத்தியில் காபூலில் சாலையோரமாக வியாபாரம் செய்யும் குழந்தைகளுக்கு ஒரு பெண் இலவச கல்வி அளித்து வருகிறார். இதில் கடந்த 2001-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  16-ஆம் தேதி மீண்டும் தலீபான்கள் ஆட்சிக்கு வந்தனர். இதனால் அந்நாட்டில் கல்வி கட்டுப்பாடுகள் படிப்படியாக அமலாக தொடங்கியுள்ளது. இந்நிலையில் உயர்நிலை பட்டதாரியான நஜந்த்  என்பவர் காபூலில் உள்ள பூங்காவில் சாலையோரத்தில் உள்ள குழந்தைகளுக்கு தினமும் 3 மணி நேரம் இலவசமாக கல்வி கற்பித்து வருகிறார் என்று டோலோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுபற்றி  நஜந்த் கூறுகையில் “நான் அந்த குழந்தைகளுக்கு முதலில் எப்படி படிக்க வேண்டும் என்ற அடிப்படை கல்வியை கற்றுக் கொடுக்க ஆரம்பித்தேன். பிறகு கணிதம் குரான் உள்ளிட்டவை படிப்படியாக கற்றுக் கொடுத்தேன். மேலும் அவர்கள் ஆங்கிலம் படிக்க ஆர்வமாக உள்ளனர். அக்குழந்தைகள் கல்வி கற்பதில் விருப்பம் இருப்பதாகவும் ஒரு நல்ல எதிர்காலத்தை விரும்புவதாகவும் கூறுகின்றனர். இந்த வகுப்புகளில் 30 மாணவர்கள் பயில்கிறார்கள். இதற்கு முன்  இக்குழந்தைகள் பிச்சை எடுத்து வந்தனர். ஆனால் நான் அவர்கள் பிச்சை எடுப்பதை நிறுத்திவிட்டு அவர்களுக்கு ஊக்கம் அளித்தேன். பின்பு அவர்களை படிக்க ஊக்க படுத்தினேன்.
மேலும் ஊக்கம் அளிப்பது இந்த நேரத்தில் செய்ய வேண்டிய சிறந்த விஷயங்களில் ஒன்றாக நான் நினைக்கிறேன்” என்றார்.

மேலும் ஷூ பாலிஷ் செய்யும் மாணவர்களில் ஒருவரான ஷகிப் “நான் படிக்க கற்றுக் கொண்டேன். எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இப்போது எனக்கு படிக்க தெரியும் என்று கூறியுள்ளார். மேலும் தனியார் பள்ளி நிறுவனங்களுக்கு எங்களால் கட்டணம் செலுத்தி படிக்க இயலாததால் இந்த வகுப்புகளில் கலந்து கொண்டு கற்பதாக” மாணவர்கள் கூறியதாக டோலோ நியூஸ் தெரிவித்துள்ளது.

Categories

Tech |