Categories
உலக செய்திகள்

120 கோடி இழப்பீடு…. பாலியல் வழக்கில் சிக்கிய இளவரசர் …. பின்னணி என்ன…!!

இளவரசர் மீதான வழக்கு தொடர்ந்து வருகின்ற நிலையில் பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு 120 கோடி இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் பிலிப் தம்பதியினரின் இளைய மகன் இளவரசர் ஆண்ட்ரூ(61). கடந்த 2006 ஆம் ஆண்டு வர்ஜீனியா  என்ற 17 வயது பெண்ணை பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்த பெண் தரப்பில் நியூயார்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனால் ஆண்ட்ரூ   இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து தன் மீதான புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோர்ட்டில் முறையிட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் மீதான பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை சந்தித்து தான் ஆக வேண்டும் என கடந்த மாதம் நியூயார்க் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் இரண்டாம் எலிசபெத் அரியணை ஏறியதன்  70வது ஆண்டை  அரச குடும்பம் கொண்டாடி வரும் இந்நேரத்தில் இந்த வழக்கு  அரச குடும்பத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும்  சுமூகமாக தீர்க்க இளவரசருக்கு ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் இளவரசர் சார்லஸ் ஆகியோர் அழுத்தம் கொடுத்து வந்ததாகவும்  தெரிகிறது.

இந்நிலையில் தன் மீதான வழக்கை முடிவுக்குக் கொண்டுவர இளவரசர் ஆண்ட்ரூ, வர்ஜீனியா உடன் சமரசம் செய்து கொண்டதாகவும் அதன் ஒரு பகுதியாக கியூப்ரே  நடத்தி வரும் தொண்டு நிறுவனத்திற்கு 16 மில்லியன் டாலர் வழங்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி 30 நாட்களுக்கு வழக்கைத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Categories

Tech |