நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் அவர் கூறியதாவது, சட்டமன்ற தேர்தலின் போது திமுக ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தது அந்த வகையில் நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கப்பட்டது. ஆவின் பால் விலை குறைக்கப்பட்டது. குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியது மட்டும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து அமைச்சர்கள் தொடங்கி முதல்வர் வரை அனைவரும் இந்த வாக்குறுதி விரைந்து நிறைவேற்றப்படும் என உறுதிமொழி அளித்துள்ளனர். ஆனால் இதை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. ஸ்டாலின் சொன்னால் அதை கட்டாயம் செய்து முடிப்பான்.! தேர்தலில் கூறிய வாக்குறுதிகள் அனைத்தையும் செய்தோம்.
இன்னும் சில மாதங்களுக்குள் குடும்பத்தலைவிக்காண பணம் விரைந்து வழங்கப்படும் மகளிருக்கு நகர்புற பேருந்துகளில் பயணம் செய்ய கட்டணம் கிடையாது என கூறினேன் அதை அதை நிறைவேற்றினேன். ஸ்டாலினை பொருத்தவரை வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு கோட்டையில் உட்கார்ந்து கொண்டிருப்பவன் அல்ல. நான் மக்களோடு மக்களாக அனைத்தும் செயல்படுகிறதா என ஆய்வு செய்கிறவன். பொங்கல் பரிசு தொகுப்பில் ஊழல்கள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஊழல் செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.