முன்னதாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தமிழக செய்தி, மக்கள் தொடர்புத்துறை செயலாளர் ஜெயசீலன் இன்று (பிப்..17)உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த பிறகு குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு பிரஸ் கவுன்ஸிலை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அதன்பின் அங்கீகாரம் அட்டையை பெறுவதற்கு 2021 ஆம் ஆண்டு திருத்தப்பட்ட புதிய விதிமுறைகள் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து இரண்டு வார காலத்திற்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.