Categories
பல்சுவை

ஒரு நாளில் ரூ 456 உயர்வு….. ரூ 30,000 தாண்டிய தங்கம்…. இதான் காரணமாம் ….!!

தங்கம் விலை உயர்வு குறித்து பாமர பொதுமக்கள் கவலை அடைந்துள்ள நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. இதனால் இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ 456 உயர்ந்து 30,344_க்கு விற்பனை ஆகிறது. தங்கத்தின் இந்த தீடிர் விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. தங்கத்தின் விலை உயர்வு குறித்து நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் கூறுகையில் ,

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்ததில் அங்கு உள்ள ராணுவ தளபதி  உயிரிழந்துள்ளார். இது உலக நாடுகளிடையே ஒரு பெரிய பதற்றத்தை ஏற்படுத்த கூடிய நிலையில் திடீரென உலகச் சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இது மாதிரியான போர் தாக்குதல் போன்ற விஷயங்கள் நடக்கும் போது தங்கத்தின் விலை உயர்வு நடக்கும் என்று தெரிவித்தார்கள்

அதோடு பங்குச் சந்தைகவீழ்ச்சியை நோக்கிப் போய்க்கொண்டு இருக்கிறது. அதனால் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய வருகிறவர்கள். ஆகவே  தங்கம் விலை உயர இதுவும் முக்கியக் காரணமாக உள்ளத. மேலும் தங்கம் விலை அதிகமாக உயரக் கூடிய அளவில் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |